வி.சிகண்டிதாசன். திருக்கோணமலை: ஓம் சக்தி சோதிட ஆராய்ச்சி நிலையம், 168/1, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (திருக்கோணமலை: அஸ்ரா பதிப்பகம், இல. 43, திருஞானசம்பந்தர் வீதி).
(14), 86 பக்கம், தகடுகள், விலை: ரூபா 200., அளவு: 20.5×15 சமீ.
நீண்டகாலமாக அல்லலுறும் ஈழத் தமிழர்களுக்காக நல்வாழ்வு கோரியும் தன் வேதனைகளையும் சோதனைகளையும் பாடல்கள் மூலமான வேண்டுதல்களாக இறைவனிடம் சமர்ப்பித்துள்ளார் சிகண்டிதாசன். இப்பாடல்களில் கணபதி, கலைமகள், தொடக்கம் கந்தனது கீர்த்தனைகள், காவடிப் பாடல்கள், கந்தன் கவசம், திருப்பள்ளி எழுச்சி, உட்பட இராஜ இராஜேஸ்வரி அன்னை ஊஞ்சல் பாடல்கள், விநாயகர் ஊஞ்சல் பாடல்கள், திருக்கோணேஸ்வரப் பெருமானுக்கு மூன்று பாடல்கள், திருமாலுக்கு இரண்டு பாடல்கள் என்ற வகையில் 37 தலைப்புகளில் பக்திப் பாடல்களைத் தொகுத்து வழங்கியள்ளார்.