சபாபதி மகேஸ்வரன் (தொகுப்பாசிரியர்), அரவிந்தன் வரதராஜ் (பதிப்பாசிரியர்). இலண்டன்: திருமுறைக்கழகம், 1வது பதிப்பு, கார்த்திகை 2012. (சென்னை 600 031: மாதவ முத்ரா, 12 எம்.வி. தெரு, பஞ்சவடி, சேத்துப்பட்டு).
212 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-0-9555359-7-0.
அருளாளர்களாகிய கச்சியப்ப சிவாசாரியார், நக்கீரர், அருணகிரிநாதர், ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் ஆகியோர் வழங்கிய முருகன் பாமாலைகளின் தொகுப்பு இது. முருகப்பெருமானின் சிறப்புகளையும், அவரது புகழையும் போற்றி இவை பாடப்பெற்றன. இந்நூலிலுள்ள பாடல்களை லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஓய்வுபெற்ற பொறியியலாளர் ச.மகேஸ்வரன் அவர்கள் தொகுத்திருக்கின்றார்.