மௌலவி முஹம்மத் ரஸீன் -மழாஹிரீ. குருநாகல்: தாருல் குர் ஆன் பப்ளிஷர்ஸ், இல. 100, கண்டி வீதி, மல்லவபிட்டிய, 1வது பதிப்பு, ஜுலை 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xiv, 136 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-41198-3-3.
இஸ்லாம் மார்க்கம், இஸ்லாமியப் பெண்களுக்கு தனி நெறிமுறைகளை வகுத்துள்ளது. ஒரு இஸ்லாமியப் பெண் எந்தெந்த வகையில் வழிதவறிச் செல்ல நேரிடுகின்றது என்பதை எச்சரித்து மௌலவி முஹம்மத் ரஸீன்-மழாஹிரீ இந்நூலை வடிவமைத்துள்ளார். அன்றாட வாழ்வில் இஸ்லாமியப் பெண்கள் செய்யும் 123 பாவங்களைக் கண்டறிந்து இந்நூலில் வரிசைப்படுத்தியுள்ளார். ஒரு பெண் செய்யும் பாவக் காரியங்களை சுருக்கமாக அல்குர் ஆன் வசனங்கள், நபிமொழி ஆதாரக் குறிப்புகள் ஆகியவற்றைக்கொண்டு எச்சரித்து இந்நூல் அவர்கள் தவறுசெய்ய முனையாமல் வருமுன் காக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண்களுக்கும், புது மணப்பெண்களுக்கும் அன்பளிப்பாக வழங்கும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 68327).