க.சண்முகலிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
vi, 129 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-484-3.
2006ம் ஆண்டுக்குப் பிந்திய ஒன்பது ஆண்டுக்காலத்தில் ஆசிரியர் எழுதிய 14 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. வரலாறு, சமூகவியல், இலக்கியம், தமிழத் தேசியவாத அரசியல், புலம்பெயர்ந்த தமிழர் வாழ்க்கை என்று பல்வேறு விடயங்களை இவை பேசுகின்றன. புரட்டஸ்தாந்திய அறமும் முதலாளித்துவத்தின் தோற்றமும், வரலாற்று ஆசிரியரும் வரலாற்று ஆதாரங்களும்: ஈ.எச்.கார் நோக்கில் அனுபவவாதமும் அகவாதமும், சமூக வரலாறும் வரலாற்றில் தனிநபர்களும்: றிச்சார்ட் ஜே.இவன்ஸ் கருத்துக்கள், சனங்களும் வரலாறும், சமூக விஞ்ஞான ஆராய்ச்சி முறையியல்: நேர்க்காட்சி வாதமும் மக்ஸ்வெபரின் விளக்கமுறைச் சமூகவியலும், அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்: சர்வதேச அனுபவம், யாழ்ப்பாணத்தில் ஆங்கிலக் கல்வியின் விருத்தியும் சமூக மாற்றங்களும்: 1810-1910, மார்க்சிய இலக்கிய விமர்சனம், ஆராய்ச்சி முறையியல்: ஜயதேவ உயங்கொடவின் புதிய நூல் பற்றிய அறிமுகம், பெனடிக்ற் அன்டர்சனின் தேசியவாதம் குறித்த கருத்துக்கள்: ஓர் அறிமுகம், புலம்பெயர் வாழ்வும் தமிழ் மொழியின் எதிர்காலமும்: ஓரு சமுதாய மொழியியல் நோக்கு, ஜே.பி.லுயிஸ் எழுதிய ‘இலங்கையின் வன்னிமாவட்டங்கள்: ஒரு கையேடு’ என்ற நூல் பற்றிய ஆய்வு, கோகிலா மகேந்திரனின் ‘புலச்சிதறல்கள்’, உண்மையான வரலாற்றை எழுதுவது எப்படி? ஆகிய 14 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.