10201 பெண் விடுதலையும் சமத்துவமும்.

சந்திரகாந்தா முருகானந்தன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 05: கேயெம் பெக்கேஜிங் இன்டஸ்ட்ரீஸ்).

x, 154 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 40., அளவு: 18×12 சமீ.

பெண் விடுதலையை வெண்றெடுப்பதற்குப் பெண்கள் அமைப்புகளின் செயற்பாடுகள் மட்டும் போதாது. பெண்ணடிமைத்தனம் என்பது பெண்களுக்கான குறைபாடு மட்டுமல்ல. இது ஒரு சமூகக் குறைபாடே. இதற்கு பாத்திரமானவர்களும், பாதிப்படைபவர்களும் பெண்கள் மாத்திரமல்ல, எனவே பெண்விடுதலையை முன்னெடுப்பதில் முழுச்சமூகமும், அரசும் கூட செயற்பட வேண்டும். சமூகம் என்கின்ற போது தனிநபர்களும், பல துறைசார்ந்தவர்களும், நிறுவனங்களும் அடங்கும் ஊடகவியலாளர்கள், கலை இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் என பல தரப்பட்டவர்களின் பங்களிப்பும் அவசியம் என்ற கருத்தை முன்வைக்கும் ஆசிரியர் பெண்விடுதலை தொடர்பான கருத்தாடலை முன்வைக்கும் 30 கட்டுரைகளை இந்நூலில் வழங்கியிருக்கிறார். சந்திரகாந்தா முருகானந்தன் (1964.01.13) யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆசிரியை. சந்திரகாந்தா, சந்திரா, காந்தா, மகிழ்னன் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்