10206 வடமாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்.

சரோஜா சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: மகளிர் அபிவிருத்தி நிலையம், இல. 7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஒக்டொபர் 2013. (யாழ்ப்பாணம்: தீபம் பிறின்டேர்ஸ், இல.717, காங்கேசன்துறை வீதி).

iv, 105 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ., ISBN: 977-180-03100-0-2.

இது வடமாகாணத்தில் பெண்கள் மட்டும் தனியாகத் தலைமை தாங்கும் குடும்பங்கள் தொடர்பாக, கள ஆய்வு மூலம் பெறப்பட்ட தரவகள், தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள அறிக்கை. மகளிர் அபிவிருத்தி நிலையம், போரின் பின் ஏற்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் கணிசமான அதிகரிப்பு, இவற்றிற்கான காரணங்கள், சமூக மேம்பாடு, வாழ்வாதாரம், என்பவற்றில் பெண்களின் வகிபாகம் மற்றும் இவ்வாறான குடும்ப பெண்களின் வலுவூட்டல் செயற்பாடு என்பவற்றை  களஆய்வு மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளது. பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் அதிகரிப்பதற்கு காரணிகளாக உள்நாட்டுப்போர், இடப்பெயர்வுகள், ஆண்கள் வெளிநாட்டுக்குச் செல்வதால் ஏற்படும் குடும்பச் சிதைவு, போன்ற காரணிகள் பெண்களை இந்நிலைக்கு ஆளாக்கியிருக்கின்றது. இவ்வாய்வில் அவதானிக்கப்பட்ட முக்கிய அம்சங்களாக பெண்களின் வருமானத்தில் மட்டும் தங்கிவாழும் குடும்பங்களின் எண்ணிக்கை, இக்குடும்பங்களின் வளப்பற்றாக்குறை, பெண்தலைமை தாங்கும் குடும்ப அங்கத்தவர்களின் வறுமைநிலை என்பன குறிப்பிடக்கூடிய அவதானிப்புகளாக உள்ளன. இது சமூக மட்டத்தில் பெண்கள் வலுவூட்டல் தொடர்பாக இணைந்து செயற்படும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் சமூக நிறுவனங்கள், பெண்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை எப்படியாக முன்னெடுக்க வேண்டும் என்ற உபாயங்களையும் கலந்தரையாடல்களையும் ஊக்குவிப்பதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. இக்கள ஆயவுக்கு எஸ். நவமோகனா அவர்களின் ஆலோசனையுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான அலோசியஸ் நிதர்சன், ஜெயம் ஜெகன் ஆகியோர் ஆய்வாளர்களாகச் செயற்பட்டுள்ளனர்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234275).     

ஏனைய பதிவுகள்