ச.முகுந்தன். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், இல.202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2014.(கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
xix, 267 பக்கம், விலை: ரூபா 490., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-9396-67-3.
இந்நூல் அர்த்தசாஸ்திரம் ஒரு அறிமுகம், அர்த்தசாஸ்திரத்தில் பொருளாதாரம் பற்றிய எண்ணக்கருக்கள், அர்த்தசாஸ்திரத்தில் இழையோடியுள்ள இராஜ்ய நிர்வாக நுட்பங்கள், ஸ்மிருதிகள், மனுஸ்மிருதியில் இராஜ்ய பரிபாலனம், இந்து இலக்கியங்களில் நீதி பரிபாலனம், இந்திய அரசியற் கோட்பாடுகள், மண்டலக் கொள்கை, மச்ச நியாயக் கொள்கை, மகாபாரதத்தில் அரசியல் பொருளியல் தொடர்பான எண்ணக்கருக்கள், ஆகிய பத்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழத்தின் இந்து நாகரிகக் கற்கைகள் புலத்தின் முதுநிலை விரிவுரையாளராவார்.