மு.திருநாவுக்கரசு. லண்டன்: ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவம், 1வது பதிப்பு, மார்கழி 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).
38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
ஜனநாயகத்திற்கான பயணத்தில் தேசியவாதம் ஒரு கட்டமாகும். தேசியவாதமானது ஜனநாயகத்தை அடைவதற்கான ஒரு வடிவமும், ஜனநாயகத்தைக் காவிச் செல்லும் ஒரு வாகனமுமாகும். தேசியவாதம் என்னும் காலகட்டக் கருவியைக் கையில் ஏந்தாமல் ஜனநாயகத்தைப் பிரசவிக்கமுடியாது. தேசியவாதம் எங்கு ஆதிக்கவாதமாகின்றதோ, அது எங்கு இனவாதமாகின்றதோ அப்போது அது ஜனநாயகத்திற்கு எதிர்வாதமாகி ஜனநாயக விரோதப் பாத்திரத்தை வகித்துவிடுகின்றது. மேற்படி கருத்தை மையமாகக்கொண்ட இந்நூல், தேசியம் என்னும் அரசியற்பதம், தேசியம் என்பது சாமானியர்களின் யுகம், ஆசியாவில் தேசியம், தமிழீழத் தேசியம், தோற்றப்பாட்டுத் தேசியம் ஆகிய ஐந்து இயல்களின் வழியாக அதனை விளக்குகின்றது.