தா.தேச இலங்கை மன்னன். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு).
183 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 350., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-93-81322-46-8.
மனித உரிமைகள், மனித உரிமைச் சாசனம், காலம் காலமாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்பன பற்றிய ஆய்வினை மேற்கொண்ட ஆசிரியர் பிரதானமான மூன்று பகுதிகளாக அவற்றை வகுத்துத் தந்துள்ளார். சர்வதேச மனித உரிமைகளின் சட்டத்திற்கான தேவைகளை உணர்ந்த உலகம், அதனை விரைவுபடுத்தத் தூண்டிய காலகட்டம், அதனை உருவாக்கவேண்டும் என்று முன்வந்த உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றத்தால் அதை உருவாக்கக் கிடைத்த வாய்ப்புக்கள், மனித உரிமைச் சாசன விதிகளைத் தெரிந்துகொள்வதற்காக நாடுகளின் அரசுகளாலும் அவர்களின் ஆழ்ந்த அறிவுபெற்ற பிரதிநிதிகளாலும், துறைசார் நிபுணர்களாலும் பரிமாறப்பெற்ற அனுபவங்களும் அறிவுரைகளும், கருத்துக்களும் ஜனநாயக மரபுகளின் வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டு 30 விதிகளாக அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதிப் பிரகடனமாக உருவாக்கப்பட்ட முழுமையான வரலாறு, இவ்விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக 2011வரை ஏற்படுத்தப்பட்ட சர்வதேச உடன்படிக்கைகள் ஒப்பந்தங்கள், மாநாட்டுத் தீர்மானங்கள் மற்றும் நடைமுறை நெறிமுறைகள், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனக் கருவிகள் என்பவற்றின் சுருக்கமான அறிமுக உள்ளடக்கங்கள் என்பன இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58127).