10219 தி.மு.க.வெற்றி முழக்கம்.

கலாநேசன். கொழும்பு: மோகன் அன் கோ லிமிட்டெட், 151, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1954. (சென்னை 1: ஜில் ஜில் அச்சகம்).

24 பக்கம், புகைப்படங்கள், விலை: 4 அணா, அளவு: 18×12 சமீ.

திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க.) தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டெம்பர் 17, 1949இல் ஒன்றுகூடித் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, தி. மு. க. வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது. இக்கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து அதன்  அதன் வசீகரிப்புக்கு இலங்கைத் தமிழர்கள் உள்ளாகியிருந்தார்கள். தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புகழ் பரப்பும் எழுச்சிப் பாடல்களையும், கொள்கை பரப்புச் செய்திகளையும் சீர்திருத்தக் கருத்துகளையும் இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளும் காவிச்சென்றன. அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட சில பாடல்களின் நூல்வடிவமாக இந்நூல் அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0550).

ஏனைய பதிவுகள்

13A21 – 10ம் 11ம் தரம் கட்டுரை மஞ்சரி: சிறப்புச் சித்திக்குச் சிறந்த துணை.

சு.வேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: சு.வேலுப்பிள்ளை, நாவற்குழி, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 208 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21 x14 சமீ. நல்ல