க.குணராசா. யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், மாநகரசபை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1966. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194 V, பண்டாரநாயக்க வீதி).
66 பக்கம், வரைபடம், அட்டவணை, விலை: ரூபா 1.00, அளவு: 19×13.5 சமீ.
சுருட்டுக் கைத்தொழில், சுருட்டுத் தொழிலின் பரம்பல், சுருட்டுத் தொழிலின் தேவைகள், சுருட்டுக்களின் வகைகள், சுருட்டுத் தொழிலாளர், சுருட்டுச் சந்தைகள், சுருட்டுக் கைத்தொழிலின் எதிர்காலம் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் புவியியல் விரிவரையாளராகப் பணியாற்றிய வேளையில் இவ்வாய்வினை மேற்கொண்டிருந்தார். இந்நூலுக்கான அணிந்துரையை கனக செந்திநாதன் வழங்கியுள்ளார்.