கணேசசுந்தரம் ரகுராகவன். மட்டக்களப்பு: க.ரகுராகவன், யுனைட்டட் வெளியீடு, வர்த்தக முகாமைத்துவ பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், செங்கலடி, 1வது பதிப்பு, டிசம்பர் 1996. (சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி).
xiv, 204 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 200., அளவு: 23.5×17.5 சமீ.
இந்நூலானது ஐந்து அத்தியாயங்களாக- திட்டமிடல், தீர்மானம் எடுத்தல், திட்டமிடலும் தீர்மானமெடுத்தலுக்குமான கருவிகள், தந்திரோபாய முகாமைத்துவம் போன்ற திட்டமிடல் தொடர்பான விடயங்களுடன் மேலதிகமாக அதன் செயல்திறனை அளவிடக்கூடிய கட்டுப்படுத்தலையும் இறுதி அத்தியாயமாகத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆகவே இந்நூலை வாசிப்பவர்கள் திட்டமிடலினை மாத்திரமன்றி, இவ்வாறு வடிவமைக்கப்பட்ட திட்டங்களை எவ்வாறு கண்காணித்து, மறுசீரமைத்துக் கட்டுப்படுத்தலாம் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். ஒரு நிறுவனம் அல்லது அரசு சிற்றினச் சூழலில் மாத்திரமன்றி பேரினச் சூழலிலும் எவ்வாறு வெற்றிகரமாக இயங்கலாம் என்பதையும் இந்நூல் மிகத் தெளிவாக விளக்குவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் அவ்வத்தியாயத்தைக் கற்பதன் நோக்கங்களுடன் ஆரம்பித்து அருஞ்சொற்கள் மற்றும் மீட்டல் விளக்கங்களுடன் முடிவடைகின்றது. நிறுவனத் திட்டமிடல் மற்றும் தீர்மானமெடுத்தல் பிரச்சினைகளை அனுபவரீதியாக ஆராய்ந்து தீர்க்கக்கூடிய வகையில் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் விடய ஆய்வொன்றைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதியாகப் பணியாற்றுகின்றார்.