10251 சமர் கண்ட முல்லைத்தீவு.

வல்வை ஆனந்தன் (இயற்பெயர்: வல்வை ந.அனந்தராஜ்). கனடா: ஈ-குருவி டொட்.கொம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (கனடா: ஜே.ஜே.பிரின்ட்).

(8), 102 பக்கம், புகைப்படங்கள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

நீண்டகாலமாக இராணுவத்தினரின் அக்கிரமிப்புக்குள்ளாகியிருந்த முல்லைத்தீவு நகரம், 1996ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18ஆம் திகதி ஒரே இரவிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் முல்லைத்தீவு மக்களின் உழைப்பினாலும் மீட்கப்பட்ட அந்த வரலாற்றையே ‘ஓயாத அலைகள்’ என்ற தாக்குதல் நடவடிக்கைகளினூடாக ‘சமர் கண்ட முல்லைத்தீவு’ என்ற இந்நூல் ஆவணப்படுத்துகின்றது. இடம் மாறிய ஆட்டிலறிகள், பண்டார வன்னியனின் வீரம் செறிந்த மண், முல்லைத் தளத்தின் பரிணாம வளர்ச்சி, அரச ஊடகங்களின் பிரச்சாரங்களுக்கு ஆப்பு, மீட்பின் களிப்பில் முல்லைத்தீவு மக்கள், இன அழிப்புக்கு எதிரான மக்கள் போராட்டம், ஓயாத அலைகளின் ஆரம்பம், ஆட்டிலறிகள் கைமாறிய விதம், தரையிறக்கமும் மீட்புச் சமரும், போர்வெறிக்குள் பலிபோன இராணுவம், மீண்டும் தொடங்கும் மிடுக்கு ஆகிய 11 அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது.  

ஏனைய பதிவுகள்

17285 நாதம் 2017.

மலர் குழு. கொழும்பு: தமிழ் கர்நாடக இசை மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). 152 பக்கம், விலை: