க.ஞானரெத்தினம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 129 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 29×21 சமீ.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் இடைநிலை மற்றும் மூன்றாம் நிலைக் கல்வித் துறையில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் இந்நூலாசிரியர் ஒரு விஞ்ஞானப் பட்டதாரியாவார். கல்விப் புள்ளிவிபரவியல் தொடர்பாக ஆசிரியர் ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டிய விடயங்கள் இந்நூலில் சிறந்த முறையில் தெளிவாகவும் சீராகவும் அறிமுகம், தரவுகளை ஒழுங்கமைத்தலும் சமர்ப்பித்தலும், மையநிலை அளவைகள், விலகல் அளவைகள், சார்பு இடம்காணல் அளவைகள், நியமப் புள்ளிகள், பரம்பலின் வடிவங்கள், இணைவு ஆகிய எட்டு பிரதான இயல்களில் முன்வைக்கப்படுகின்றன. மீட்டற் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.