டபிள்யூ ஆரியதாச த சில்வா. மகரகமை: கல்வி ஆராய்ச்சித்துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஒக்டாபர் 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 53 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
தேசிய கல்வி முறைமையொன்று என்பது சகல அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்வதனால் அதன் தொடர்ச்சி உறுதிப்படுத்தப்படும் ஏதேனும் ஒரு கல்வி முறைமை மட்டுமல்ல. கல்வி முறைமையொன்று இவ்விரு நிபந்தனைகளையும் நிறைவேற்றலாம். ஆனால் அப்பதத்தின் முழுக் கருத்தில் தேசிய முறைமையொன்றாக இருப்பதிலிருந்து தூரவிலகி இருக்கவும் முடியும். இவ்வுரையில் முயற்சிக்கப்பட்ட மொழி ஆய்வு, தேசிய கல்வி முறைமையொன்றின் சகல அம்சங்களின்பாலும் கவனத்தை ஈர்க்க உதவுவதோடு, இலங்கையின் கல்வித்தந்தை கன்னங்கராவின் எண்ணக்கரு கூடிய விளக்கத்தையும் வழங்கியது. இம்முயற்சி கல்வியாளர்களுக்கும் தொழில் சார்ந்தோருக்கும் பயன்தராவிடினும் குறைந்தபட்சம் பொது மக்களுக்கு ஏதேனும் நலனைத்தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர விரிவுரைத்தொடர் இலக்கம் 8, 17 ஒக்டோபர் 1995. கலாநிதி டபிள்யூ ஆரியதாச த சில்வா, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் கல்விப் பேராசிரியராகக் கடமையாற்றுவதோடு, கல்வித் தத்துவம், கல்வி உளவியல், பாட நெறிகளையும் கற்பிக்கிறார். அவர் 1981இலிருந்து 1990 வரை கலவிப்பீடத்தின் தலைவராகவும் கடமையாற்றினார்.