ஆரம்பக் கல்விப் பிரிவு. தென்மராட்சி: ஆரம்பக் கல்விப் பிரிவு, தென்மராட்சிக் கல்வி வலயம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பதிப்பகம், 555 நாவலர் வீதி).
vii, 75 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ.
தென்மராட்சிக் கல்வி வலயத்தின் பிள்ளைநேய அணுகுமுறைக்கான உத்தியோகபூர்வ செய்திமடல். தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார் அவர்களின் ஆலோசனையுடன், ஆரம்பக்கல்வி உதவிப்பணிப்பாளர் ந.சர்வேஸ்வரன் அவர்களதும் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ந.மகேஸ்வரன் அவர்களதும் உதவியுடன் தென்மராட்சிக் கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவினரால் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு மலர். ஆரம்பக் கல்வியும் சிறுவர்நேய அணுகுமுறையும், பாடசாலை பற்றிய அறிமுகம், திட்ட இலக்குப் பற்றிய தகவல்கள், பாடசாலை மட்ட திட்டங்கள், பாடசாலைத் திட்டமிடற் செய்முறை, திட்டமிடலுக்கான கணிப்பீடுகளை மேற்கொள்ளல், பிள்ளைநேய திட்டமிடலில் கவனிக்கவேண்டிய விடயங்கள் ஆகிய ஏழு பிரதான பிரிவுகளை இவ்வழிகாட்டி நூல் உள்ளடக்கியுள்ளது. யுனெஸ்கோவின் நிதி உதவியுடன் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58280).