சூரியா ஜெயராஜா. முல்லைத்தீவு: திருமதி சூரியா ஜெயராஜா, செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172, மில் வீதி).
xiv, 92 பக்கம், படங்கள், விலை: ரூபா 250., அளவு: 24.5×17.5 சமீ.
திருமதி சூரியா ஜெயராஜா, முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றுபவர். திருக்கோணமலை-கும்புறுப்பிட்டியைப் பிறந்த மண்ணாகக் கொண்டவர். சிறுவர்கள் உள்ள வீட்டில் இருக்கவேண்டிய அன்னையர் கையேடாக 62 ஆக்கங்களைக்கொண்ட இவ்வறிவியல் கடடுரைத் தொகுப்பினை வழங்கியுள்ளார். தரம் 1 முதல் 9 வரையான மாணவர்களின் ஆக்கத்திறன் விருத்தியும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான கட்டுரை வழிகாட்டியும் இவற்றுள் அடங்கியுள்ளன. பிள்ளைகளின் ஆரம்ப ஆக்கத்திறனைத் தூண்டுபவையாக 30 ஆக்கங்களும், படம் பார்த்து வாக்கியம் அமைக்கும் பயிற்சிக்கான 5 ஆக்கங்களும், தொடக்கிவிடப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வாக்கியம் அமைக்கும் பயிற்சிக்கான 5 ஆக்கங்களும், படம் பார்த்துக் கதைகூறும் பயிற்சிக்கான இரு ஆக்கங்களும், தொடக்கிவிடப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கதை சொல்லுதல் என்ற பயிற்சிக்கான இரு ஆக்கங்களும், கொடுக்கப்பட்ட தலைப்பிற்குப் பொருத்தமான கதை எழுதுவதற்கேற்ற பொறுமை, பகிர்ந்துண் ஆகிய இரு தலைப்புகளிலான ஆக்கங்களும், ஆரம்பப் பிரிவினரின் மனப்பேச்சும் இடைநிலைப் பிரிவினரின் எழுத்தாற்றலைத் தூண்டுதலும் என்ற விடயதானத்திற்கேற்ற 18 ஆக்கங்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.