ஈ.எஸ்.லியனகே (ஆங்கில மூலம்), ஆர்தர் ஜோன்ஸ் பெர்ணாண்டோ (தமிழாக்கம்). மகரகம: கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1995. (கோட்டே: கிரபிக்ஸ் சிஸ்டம்ஸ், இல. 11, உஸ்வத்த மாவத்தை).
(7), 52 பக்கம், சித்திரங்கள், விலை: இலவசம், அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-597-307-5.
Managing Meetings in School என்ற தலைப்பில் முன்னர் UNICEF அமைப்பினால், ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தைகள் அவசரகால நிதியத்தின் உதவியுடன் வெளியிடப்பட்ட நூலின் தமிழாக்கம். கூட்ட முகாமைத்துவம் ஏன் அவசியம்? (விடய ஆய்வு: தோல்வியுற்ற ஒரு கூட்டம், உள்ளீடுகளிலிருந்து உச்சப் பயனைப் பெற்றுக்கொள்ளல், கூட்டமொன்றின் வெளியீடு என்றால் என்ன? கூட்டப்பட்டிருக்கக்கூடாத ஒரு கூட்டம், சிறந்த முகாமைத்துவத்தைக் கொண்ட கூட்டமொன்றின் முக்கியத்துவம்), கூட்ட முகாமைத்துவத்தின் நுட்பங்கள் (கூட்ட முகாமைத்துவத்தின் முதற்கட்டம்-முன் ஆயத்தம், கூட்டத்தை நடத்துதல், கூட்டம் சார்ந்த பின் நிகழ்வுகள்), கூட்ட முகாமைத்துவமும் பிணக்குத் தீர்வும் (கருத்து மோதல் ஊடாக சமரசத்துக்கு வரல், பங்குகொள் முகாமைத்துவத்திற்காகக் கூட்டங்களைப் பயன்படுத்தல்)ஆகிய மூன்று பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 223766).