க.பேர்ணாட். வவுனியா: க.பெர்ணாட், பீடாதிபதி, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, 2013. (வவுனியா: அகரம் அச்சகம்).
44 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-41036-0-3.
இந்நூல் பெற்றோரியம் தொடர்பான பல விடயங்களை பகிர்ந்துகொள்கின்றது. பெற்றோரியம், பெற்றோரியத்தின் ஐந்து இலக்குகள், பெற்றோரியத்தின் நடையியல்கள், பிள்ளைகளின் கல்வி விருத்தியில் பெற்றோரியம் ஒரு திறவுகோல், கல்வி சார்பாக பிள்ளைகளுக்கு உதவுதல், பிள்ளைகளின் பாடசாலைச் செயற்பாடுகளுடன் இணைந்து உதவுதல், பிள்ளைகளுடன் உரையாடுதல், பிள்ளைகளைக் கட்டுப்படுத்தல், பிள்ளைகளின் சுயமதிப்பினை விருத்தியாக்குதல், குழந்தைகளுக்கான வழிகாட்டல், கல்வி செல்நெறியில் விழுமியம் ஆகிய 11 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.