சே.சிவசண்முகராஜா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சே.சிவசண்முகராஜா, சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவ அலகு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2013. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செற் பிறின்ரேர்ஸ், பலாலி வீதி).
vii, 121 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-44239-4-7.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திலுள்ள அனுபோக வைத்திய பரராசசேகரம் என்னும் பெயரிலமைந்த 19ஆம் இலக்க ஏட்டுச் சுவடியிலுள்ள சன்னிரோகம் என்னும் பகுதி, ஐ.பொன்னையா அவர்களாற் பதிப்பிக்கப்பட்ட பரராசசேகரம் சன்னிரோக நிதானத்துடன் ஒப்பிடப்பட்டு சித்த மருத்துவ கலாநிதி சே.சிவசண்முகராஜா அவர்களால் உரை எழுதிப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. சன்னி அறிமுகம், சனனி நோய், வாதசன்னி, பித்தசன்னி, சிலேற்பனசன்னி, சுரசன்னி, வாத சன்னிகள் -2, நானாவித சன்னிகள், சன்னி 13 என்ற வகைப்படுத்தல், சன்னி-தனிப்பாடல், சன்னி சிகிச்சை, சன்னிகாலன் மாத்திரை ஆகிய 12 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 234397).