ஜெ.சத்தியேந்திரன் (பதிப்பாசிரியர்), சி.சிவச்சந்திரன் (ஆலோசகர்). யாழ்ப்பாணம்: ஜெ.சத்தியேந்திரன், சுண்டிக்குளி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ. தம்பி ஒழுங்கை).
(14), 125 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ.
பெரிய, சிறிய வீட்டுத்தோட்டத் தென்னைச் செய்கையாளர்களினதும் பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்களினதும் விவசாயத்துறைசார் உத்தியோகத்தர்களினதும் தென்னைச் செய்கை சம்பந்தமான வழிகாட்டியாக இந்நூல்அமைகின்றது. தென்னைச் செய்கையின் அறிமுகம் முதல் தென்னை இனங்கள், அதன் உயிரியல் இயல்புகள், நாற்றுமேடை அமைத்தல் முறை, எப்படி நாற்று நடுகை செய்யவேண்டும். இயற்கை, செயற்கை உரம் பாவிக்கும் முறைகள், தென்னந்தோட்டங்களில் மண் ஈரலிப்பு பாதுகாப்பு முறை, தென்னையில் நோயும், பீடைக் கட்டுப்பாடும், தென்னந் தோட்டங்களை எப்படிப் புனரமைப்புச் செய்வது, ஊடுபயிர்ச் செய்கை, கால்நடைகள் வளர்த்தல், நீர்ப்பாசன முறைகள், தென்னைச் செய்கையாளர்களுக்கு உதவும் அமைப்புகள், தென்னையின் ஆயுர்வேத மருத்துவம், என்பன தரவுகள், புள்ளிவிபரங்களுடன் இந்நூலில் தரப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 210406).