சி.கந்தையா. கொழும்பு 13: சி.கந்தையா, 102/3, புதுச் செட்டித் தெரு, இணை வெளியீடு, கொழும்பு: ஊற்றுப் பிரசுரம், 1வது பதிப்பு, மார்ச் 1977. (கொழும்பு: சுதந்திரன் அச்சகம்).
மண்ணியல் வல்லநர ஒருவரால், அத்துறையில் முதன்முதலாக ஈழத்தில் வெளிவந்த தமிழ் நூல் இது. மண்ணின் இயற்கை அமைப்பு, இழையமைப்பு, இரசாயன, பௌதீக இயல்புகள், பொருளாதார முக்கியத்துவம் போன்ற விடயங்கள் இந்நூலில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. மண் உண்டாகுதம் விதம், மண்ணின் பொதுப்பண்புகள், மண்ணில் கனிப்பொருள்கள், நீர், சேதனப் பொருள், மண்ணில் நுண்ணுயிர், பி.எச்.பெறுமானமும் அதன் விளைவுகளும், களர் நிலமும் உவர் நிலமும், மண்படை அடுக்கு, சில சாதாரண மண் பகுப்பு முறைகள், போசணிகள், சுவட்டு மூலகங்கள், பசளைகள், வளமாக்கிகள், ஆகிய தலைப்புகளில் 13 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத் திணைக்களத்தின் இரசாயன ஆராய்ச்சிப் பிரிவிலும், இலங்கை விஞ்ஞான கைத்தொழில் தாபனத்தின் சார்பாக கல்ஓயா அபிவிருத்தித் திட்டத்திலும் மண்வள ஆய்வுகள் நடத்திப்பெற்ற பெறுபேறுகளைத் தனித்தும் சேர்ந்தும் பல கட்டுரைகளாக அயன விவசாயி (Tropical Agriculturist) என்னும் சஞ்சிகைக்கு எழுதியும், இலங்கை விஞ்ஞான முன்னேற்றக் கழகத்தின் வருடாந்தச் சம்மேளனங்களில் வாசித்தும் அடைந்துள்ள அனுபவத்தின் விளைவாக இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 210414).