கே.நரேந்திரன். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு 13: லட்சுமி பிரின்டர்ஸ், 195, Wolfendhal Street).
x, 134 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 175., அளவு: 25.5×19.5 சமீ.
இந்நூல் விவசாயத்தை ஓர் பாடமாக எடுக்கும் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கேற்றது. கல்வியமைச்சின் பாடவிதானத்தைத் தழுவி எழுதப்பட்டது. நூலின் முன்பகுதியில் பாடத்திட்டம் பாடவிளக்கம் என்பன இடம்பெறுகின்றன. பின்பகுதியில் மாணவர்கள் செயல்ரீதியாக ஈடுபடவேண்டிய திட்டங்கள் உள்ளன. 2000ஆம் ஆண்டில் மாணவர்கள் எதிர்நோக்கும் கல்விகள், மாதிரிவினாக்கள், பொது அறிவு, பாட விளக்கங்கள், பாடக் குறிப்புகள் என்பன சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129488).