கு.சதாசிவமூர்த்தி. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 235, காங்கேசன்துறை வீதி).
(2), 92 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 45.00, அளவு: 20×14 சமீ.
புதிய விவசாய பாடத்திட்டத்திற்கமைவாக எழுதப்பட்ட நூல். மண், மழைவீழ்ச்சி தொடர்பான விபரங்களைச் சேகரித்தல், மண் பண்படுத்தல், நடுவதற்குப் பயன்படுத்தப்படும் பதியப் பொருட்கள், சேதனப் பசளை, நீர்ப்பாசனம், களைகட்டல், பயிர்களைத் தாக்கும் சிறு பிராணிகள், நோய்கள், சந்தைப்படுத்தல், விவசாயத்துக்கு உதவும் நிறுவனங்கள், கடன்பெறுவதற்கான உத்தேச செலவு விபரப்பட்டியல் என்பன அலகு 10இலும், மண் அரிமானம், நீர்வடிப்பு, பருவப்பெயற்சிக் காற்றுகளும் மழைவீழ்ச்சியும், நடுகைக்குகந்த வித்துக்களின் இயல்புகள், பண்படுத்துவதற்கான உபகரணங்களும் கருமங்களும், இரசாயன வளமாக்கிகள், பயிர்கள் காட்டும் குறைபாட்டறிகுறிகள், இரசாயனமுறைக் களைகட்டல், சிறு பிராணிகளின் இனப்பெருக்கமும் கட்டுப்பாடும், நோய்களும் கட்டுப்பாடும், சந்தைப்படுத்தல், பயிர்ச்செய்கை முறைகள், சூழல் மாசுபடல், பயிர்ச்செய்கை ஆகிய விடயங்கள் 11ஆவது அலகிலும் விளக்கப்பட்டுள்ளன. விவசாய டிப்ளோமா பட்டம் பெற்ற நூலாசிரியர் வசாவிளான், பலாலி ஆசிரிய கலாசாலையின் விவசாயபீட விரிவுரையாளராகவும், சேவைக்கால விவசாய ஆலோசகராகவும் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 103005).