வை.இளையதம்பி (ஆசிரியர்), இரசிகமணி கனக.செந்திநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சன்மார்க்க சபை, குரும்பசிட்டி, தெல்லிப்பழை, 1வது பதிப்பு, சித்திரை 1971. (யாழ்ப்பாணம்: சக்தி அச்சகம், ஸ்டான்லி வீதி).
(8), 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1.00, அளவு: 17.5×12 சமீ.
32 பலவினப் பொருள் தலைப்புகளில் புனையப்பெற்ற சிறுவர் பாட்டுக்கள். சிறுவர்களின் மனதைப் புரிந்துகொண்டு, அவர்களுக்க ஏற்ற பொருள்களில் எளிய நடையில் சந்த அமைப்புடன் எழுதப்பட்ட பாடல்கள். பாப்பா, பசுக்கன்று, காசு, குடை, சேவல், புத்தகம், பஞ்சு, தேன்கூடு, கைகள், துவிச்சக்கரம், நாம் நடப்போமே, அப்பப்பா, திசைகள், புகைவண்டி, ஐந்து மிச்சம், கமக்காரன், குயிற்குஞ்சு, கப்பல், மழை, காவடி, வருஷப்பிறப்பு, வண்ணத்துப் பூச்சி, வானொலி, பிச்சைக்காரன், பந்தடிப்போம், பறவைக்கப்பல், வாழை இனம், கண்ணன் வருகிறான், ஆடு, நமஸ்காரம், தைப்பொங்கல், தமிழ்மொழி வாழ்த்து, ஆகிய 32 தலைப்புகளில் இப்பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றிய வை. இளையதம்பி (புனைபெயர்: இதம்), ஈழகேசரி பொன்னையா அவர்களின் தமக்கையாரின் புத்திரனாவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 82281).