10428 பூமணி: சிறுவர் கவிதைகள்.

நவாலியூர்க் கவிராயர் (இயற்பெயர்: த.பரமலிங்கம்). யாழ்ப்பாணம்: கலாசாரப் பேரவை, நல்லூர் பிரதேச செயலகம், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: பொஸ்கோ அச்சகம், நல்லூர்).

(12), 44 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.

நவாலியூர்க் கவிராயர் த.பரமலிங்கம் அவர்களின் இந்நூல், சிறுவர்கள் கற்றுணரக்கூடிய விடயங்களைக் கவிதைகளாகச் சுமந்து வந்திருக்கிறது. இளைஞருக்கேற்ற முப்பது கவிதைகளைத் தொகுத்து தனது தாயின் பெயரால் தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தந்திருக்கிறார். வீடு, வீட்டுச் சூழல், இயற்கை,  வெளியுலகு,  தமிழ், திருக்குறள், அறிவுரைகள் எனப் பல்வேறு அம்சங்கள் சிறுவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் இதில் பொதிந்து உள்ளன. இறைவன், அம்மா என பக்தி, பாசத்தோடு தொடங்கும் இக்கவிதைத் தொகுப்பு, தொடர்ந்து தந்தை, தம்பி, அக்கா எனக் குடும்பத்தின் கூறுகளையும், சோமசுந்தரப் புலவர், அறிஞர் அண்ணா, காந்தி தாத்தா,  வித்தகர் விபுலானந்தர்  போன்றோரின் சேவைகளையும் பண்புகளையும் கவிதையினூடாகவே கொண்டுசெல்லக் கவிஞர் முனைகிறார். சிறுவயதில் நாம் விரும்பிப் படித்த கதைகளை இத்தலைமுறையினரும் அறியும் வகையில் நம்ப முடியவில்லை, முயலாமை போன்ற கவிதைகளின் வழியாகத் தருகிறார்.

ஏனைய பதிவுகள்