சீ.எம்.ஏ.அமீன் (மொழிபெயர்ப்பாளர்). கலகெடஹேன: ரேஷ்மா பதிப்பகம், 330/3, வறபலான வீதி, திஹாரிய, 2வது பதிப்பு, பெப்ரவரி 2008, 1வது பதிப்பு, மார்ச் 1988. (கல்ஹின்ன: விங்ஸ் கிராப்பிக்ஸ், 262 ஏ, கண்டி வீதி).
(8), 88 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19×13 சமீ., ISBN: 978-955-1691-00-4
இஸ்லாமிய சிந்தனைகள்- சஞ்சிகையின் ஆசிரியரான சீ.எம்.ஏ.அமீன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த கிராமிய இலக்கியநூல். இதிலுள்ள கதைகள் அனைத்தும் நகைச்சுவை, சமூக நீதி, நற்பண்புகள் பற்றிக் கூறுகின்றன. பெரும்பான்மையான கதைகள் தினகரன் வார மஞ்சரியில் அவ்வப்போது வெளியாகியிருந்தன. பயங்கரமான மிருகம், பணக்காரியும் கள்வனும், தவளையின் முதுகிலே கோடுகள் விழுந்தது எப்படி?, பதறிய காரியம், தங்கக் கோலின் மர்மம், கொள்ளையர்களின் முற்றுகை, ஒரு நாயின் கதை, பெண்ணா நாயா?, ஒரு மூடன் மாமனார் வீடு சென்றான், சிறந்த மருமகள் யார், கழுதை மாப்பிள்ளை, சுவர்க்கத்திற்கு ஒரு நாவிதன் தேவை, தவளையினதும் குரங்கினதும் தலைவிதி, பஞ்சு தந்த பாக்கியம், ஸ{ர்பாலா, ஐந்து கதைகள், ஒரு விவசாயியும் பயந்தாங்கொள்ளிச் சிங்கங்கள் பன்னிரண்டும், விதியும் மதியும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 18 கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52383).