நிலா தமிழின்தாசன். (இயற்பெயர்: மிக்கேல் அருள்மொழிராசா). மட்டக்களப்பு: கதிரவன் த. இன்பராசா, கதிரவன் கலைக்கழகம், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, 2014. (களுதாவளை: மாருதி அச்சகம்).
viii, 46 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 180., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-54839-2-6.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகப் புனையப்பட்ட சிறுவர்களுக்கான இக்குறுநாவல் ஆதித்தன் என்ற கதாபாத்திரத்தினூடாக நகர்த்தப்படுகின்றது. அஞ்சாமை, பணிவு, ஆற்றல், ஒழுக்கம், கல்வியில் நாட்டம், சமூகநலனில் அக்கறை ஆகிய பண்புகளை சிறுவர்களின் மனதில் ஏற்படுத்தும் நோக்குடன் இக்கதை புனையப்பட்டுள்ளது. கதையின் முடிவில் சாமியார் ஒருவர் இரத்தினக் கற்கள், தங்க நாணயங்கள் நிறைந்த கலசத்தை ஆதித்தனிடம் கொடுத்து ஆதித்தனின் கனவை நனவாக்குகின்றார்.