டேவிட் வில்லியம்ஸ் (ஆங்கில மூலம்), ஹேமச்சந்திர பதிரன (தமிழாக்கம்). கொழும்பு 10: சமயவர்த்தனபுத்தகசாலை (தனியார்) கம்பெனி, 61, வண. ஹக்கடுவே ஸ்ரீ சுமங்கலநாஹிமி மாவத்தை, மாலிகாகந்த வீதி, மருதானை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 10: சமயவர்த்தன அச்சகத்தார், 61, வண. ஹக்கடுவே ஸ்ரீ சுமங்கலநாஹிமி மாவத்தை, மருதானை).
189 பக்கம், விலை: ரூபா 330., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-570-801-2.
The Boy in the Dress என்ற தலைப்பில் பிரித்தானியரான David Walliams எழுதிய சிறுவர் நாவல், 2009இல் பிரித்தானியாவில் Harper Collins என்ற வெளியீட்டாளரால் வெளியிடப்பட்டது. இந்நூலின் தமிழாக்கத்தை மாறவிலவைச் சேர்ந்த சிங்கள எழுத்தாளர் ஹேமசந்திர பதிரன தமிழாக்கம் செய்திருக்கிறார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 199547).