தெத்சுக்கோ குரொயானகி (ஜப்பானிய மூலம்), எம்.எச்.முகம்மது யாக்கூத். (தமிழாக்கம்). கொழும்பு 15: எம்.எச்.முகம்மது யாக்கூத், 65/87, காக்கைத் தீவு தேசிய வீடமைப்புத் தொகுதி, 1வது பதிப்பு, 2006. (தெகிவளை: ஏ.ஜே. பிரின்ட்ஸ், 44 ஸ்டேஷன்; வீதி).
xxxviii, 228 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 955-99636-0-0.
தமது பிள்ளைப்பருவ நினைவுச் சுவடுகளினூடாக யப்பானிய எழுத்தாளர் திருமதி தெத்சுக்கோ குரொயானகி (Tetsuko Kuroyanagi) ஜப்பானிய மொழியில் ‘மதொகிவா நொ தொத்தொ சங்’ என்ற தலைப்பில் எழுதி, டொரத்தி பிரிட்டன் (Dorothy Britton) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த Totto-Chan: The little Girl at the Window என்ற நூலின் தமிழாக்கம் இது. சுதந்திரம், விநோதம், அன்பு போன்ற பண்புகளைப் பாடசாலையினுள் வரவழைத்த வாழ்க்கை நயப்பையும் மனிதநேயத்தையும் கல்வியுடன் ஒன்றுகலக்கச் செய்யத்தக்க விதம் எது என்பதை ஒரு பாடசாலையில் சிறுமியொருத்தி பெற்ற உள்ளத்தைக் கிள்ளும் அனுபவங்களினூடாக இக்கதை விளக்குகின்றது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 111709).
12A29 தொத்தொ சங்: சாளரமருகில் ஒரு சிறுமி.
தெத்சுக்கோ குரொயனகி (ஜப்பானிய மூலம்), எம்.எச்.முகம்மது யாக்கூத். (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, 2006. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxvi, 172 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-467-3.
தமது பிள்ளைப்பருவ நினைவுச் சுவடுகளினூடாக யப்பானிய எழுத்தாளர் திருமதி தெத்சுக்கோ குரொயானகி (Tetsuko Kuroyanagi) ஜப்பானிய மொழியில் ‘மதொகிவா நொ தொத்தொ சங்’ என்ற தலைப்பில் எழுதி, டொரத்தி பிரிட்டன் (Dorothy Britton) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த Totto-Chan: The little Girl at the Window என்ற நூலின் தமிழாக்கம் இது. இதன் முதற் பதிப்பு 2006இல் படிப்பினை தரும் பாடசாலை என்ற தலைப்புடன் வெளிவந்தது. சுதந்திரம், விநோதம், அன்பு போன்ற பண்புகளைப் பாடசாலையினுள் வரவழைத்த வாழ்க்கை நயப்பையும் மனிதநேயத்தையும் கல்வியுடன் ஒன்றுகலக்கச் செய்யத்தக்க விதம் எது என்பதை ஒரு பாடசாலையில் சிறுமியொருத்தி பெற்ற உள்ளத்தைக் கிள்ளும் அனுபவங்களினூடாக இக்கதை விளக்குகின்றது. (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 10453)