10455 பாணியில் மிதந்த தோணி: சிறுவர் கதை.

உ.நிசார் (இயற்பெயர்: எச்.எல்.எம்.நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம். 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2015. (மாவனல்லை: எம்.ஜே.எம்.அச்சகம், 119, பிரதான வீதி).

24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 180., அளவு: 23.5×18.5 சமீ., ISBN: 978-955-0503-09-4.

பாணியில் மிதந்த தோணி: சிறுவர் கதை.

உ.நிசார் (இயற்பெயர்: எச்.எல்.எம்.நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம். 70/3, புதிய கண்டி வீதி, 3வது பதிப்பு, 2019, 2வது பதிப்பு, 2017, 1வது பதிப்பு, 2015. (மாவனல்லை: எம்.ஜே.எம்.அச்சகம், 119, பிரதான வீதி).

24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 23.5×18.5 சமீ., ISBN: 978-955-0503-09-4.

உடுநுவரை நிசார் எனவும் உ.நிசார் எனவும் புனைபெயரில் எழுதிவரும் எச்.எல்.எம்.நிசார், 2005 முதல் நீண்ட காலமாகச் சிறுவர் இலக்கியம் படைத்து வருபவர். சப்ரகமுவ மாகாண சாஹித்திய விழா – 2014இல் முதலாம் பரிசும், சான்றிதழும் பெற்ற இவரது சிறுவர் கதையே இங்கு நூலுருவாகியுள்ளது. கண்டியில் அமைந்துள்ள மீரா மகாம் பள்ளிவாசலில் செய்யது ஸியாவுத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் அடக்கஸ்தலம் அமைந்துள்ளது. முன்னர் அவரின் ஞாபகார்த்தமாக வருடம்தோறும் இஸ்லாமிய மத வைபவமொன்று நடைபெறுவதுண்டு. கொடியேற்றம், இராத்தீபு, கூடு எடுத்தல், கந்தூரி, எனப்பல இஸ்லாமிய மத அம்சங்களுடன் கண்டிமாநகர் வீதிகளில் 12 தினங்கள் உலாவந்த ‘சந்தனக்கூடு’ அவ்வைபவத்தின் சிறப்பம்சமாகும். காலப்போக்கில் பல இஸ்லாமிய இயக்கங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் 1968முதல் இவ்விழா நிறுத்தப்பட்டுவிட்டது. நூலாசிரியர், தான் சிறுவயதில் கண்டு அனுபவித்த அந்த சந்தனக்கூடு நிகழ்வுகளை நினைவில்கொண்டு அத்திருவிழாவின் பின்னணியில் இக்கதையை உருவாக்கியிருக்கிறார்.  முத்துக்கணையாழி இரு பாகங்களாகவும் யானையும் பானையும், காடும் கதை சொல்லும் ஆகிய இரண்டும் தனிநூல்களாகவும்  மொத்தம் இவரது நான்கு சிறுகதை நூல்கள் முன்னதாக வெளிவந்துள்ளன.  நட்சத்திரப் பூக்கள், வெண்ணிலா, மலரும் மொட்டுகள், சிறகு விரி, பாவிருந்து, இளையநிலா, நல்ல தங்காள், கோமாதா ஆகிய  எட்டு சிறுவர் பாடல்கள் தொகுப்புகளாக வெளிவந்துமுள்ளன.

ஏனைய பதிவுகள்

Farmacia online generica di Digoxin

Content Qual è il prezzo di Lanoxin 0.25 mg online? Quanto dura l’effetto della digossina? Come ordinare Lanoxin 0.25 mg generico online? Qual è il