உபாலி லீலாரத்ன (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், இல. 675, பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, 2010. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
(8), 144 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-2825-9.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலக்கியத்துறையில் ஈடுபட்டுவரும் உபாலி லீலாரத்ன ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழகப் படைப்பாளிகளான ஜெயகாந்தன், பிரபஞ்சன், கு.சின்னப்பபாரதி போன்றோரின் படைப்புக்களை சிங்கள வாசகர்களிடையே கொண்டுசென்றவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் தென்னிலங்கையில் பிறந்தபோதும் மலையகத்தில், தலவாக்கலையில் நீண்டகாலம் வாழ்ந்தவர். 08-12 வயது இளமைக் குதியாட்ட அனுபவங்களைச் சித்திரிக்கும் ‘பினிவந்தலாவ’ என்ற இளையோர் நாவலே இங்கு திக்கவல்லை கமாலின் கைவண்ணத்தில் தமிழ்வடிவம் பெற்றுள்ளது. தலவாக்கலைத் தோட்டப் பிரதேச வாழ்வில் பல்லின மக்களோடும் நண்பர்களோடும் இணைந்த வாழ்வும், அந்த வாழ்வின் சுருதி பேதங்களுமே இப்படைப்பின் மூலவிசையாகத் திகழ்கிறது.