அ.குமாரசுவாமிப் புலவர் (மூலம்), கு.அம்பலவாணபிள்ளை (அரும்பதவுரை). சுன்னாகம்: தனலக்குமி புத்தகசாலை, 2வது பதிப்பு, ஏப்ரல் 1934, 1வது பதிப்பு, ஜனவரி 1930. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(8), 76 பக்கம், விலை: சதம் 0.50, அளவு: 18×12 சமீ.
இந்நூல் வட மொழி இரகுவமிசத்தையும் தென்மொழி இரகுவமிசத்தையும் முதனூல்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தென்மொழி இரகுவமிசச் செய்யுட்கள் இடையிடையே மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இதனை எழுதிய சுன்னாகம் வித்துவ சிரோமணி அ.குமாரசுவாமிப் புலவரவர்கள் எழுதிய போதிலும் அவர் உயிருடன் இருந்தபோது இந்நூல் வெளியிடப்பட்டிருக்கவில்லை. கையெழுத்துப் பிரதியாகவிருந்த இந்நூலை அவரது மூத்த மகனான கு.அம்பலவாணபிள்ளை அவர்கள் பதிப்பித்து வெளியிடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். திலீபன் வரலாறு, நந்தினியை வழிபடுதல், நந்தினி திலீபனுக்கு வரங் கொடுத்தல், இரகுவுற்பத்தியும் யாகஞ்செய்தலும், திக்கு விசயஞ்செய்தல், கௌற்ச முனிவர் பொருள் வேண்டல், மாலையீடு, கடிமணஞ்செய்தல், தசரதனுற்பத்தி, தசரதன் அரசுபுரிதல், புதல்வரைப் பெறுதல், வேள்வி காத்தலும் விவாகஞ்செய்தலும், இராமபிரான் வனவாசம், அனுமான் தூதும் இராவண சங்காரமும், அயோத்திக்கு மீளலும் அரசு புரிதலும், யாகஞ்செய்தலும் சுவர்க்கம் புகுதலும், குசன் அயோத்தியை அரசுபுரிதல், அதிதி அரசியலும் வமிசமுறையும் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4931).