ஊர்வசி (இயற்பெயர்: யுவனேஸ்வரி தர்மரட்ணம்). தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (சென்னை 600077: மணி ஓப்செட்).
64 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-82033-95-0.
யாழ்ப்பாணம், கருகம்பனையில் 1956இல் பிறந்தவர் ஊர்வசி. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவியான இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பௌதிக விஞ்ஞானத்துறையில் பட்டம் பெற்றவர். மட்டக்களப்பு தேசியக் கல்வியியல் கல்லூரியின் இணைத் தலைவராகப் பணியாற்றிவருபவர். எண்பதுகளில் எழுச்சிபெற்ற ஈழப் பெண்ணியவாதக் கவிதையினது உந்துசக்தியென விமர்சகர்களால் குறிப்பிடப்படுபவர். 1982-1985 காலப்பகுதியில் இவரது பல கவிதைகள் புதுசு, அலை, சக்தி ஆகிய இதழ்களில் வெளிவந்திருந்தன. இவற்றுள் சில மரணத்துள் வாழ்வோம், சொல்லாத சேதிகள் தொகுப்புகளில் இடம்பெற்றிருந்தன. இவர் எழுதிய பழையதும் புதியதுமான கவிதைகளின் முதலாவது தொகுப்பு இதுவாகும்.