கவிப்பிரியன் ஆர். ஜோன்ஸ்டன். தெகிவளை: கல்ஹின்னை கலைமுத்துப் பிரசுரம், 1வது பதிப்பு, 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).
60 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 18×13 சமீ.
1993இல் அகில இலங்கை ரீதியில் மனித உரிமைகள் தொடர்பான கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற இக்கவிஞர், இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் வாலிப வட்டம் என்ற நிகழ்ச்சியில் கவிதைகள் எழுதியும் நடித்தும் இயக்கியும் பங்கேற்றவர். பின்னாளில் ஊடகங்களில் சிறுகதைகளையும் எழுதத்தொடங்கியவர். இந்நூலில் இவர் எழுதிய இந்த நந்தவனம், இந்த விலாசத்திற்கு, பதிப்புரை, என் சுவாசத்தின் விலாசம், உன் விலாசம் என்ன, நீ எந்த மலரோ, நரக பாலைவனம், இதயச் சிதறல்கள், மரண வாசல், நீ, கல்விச் சிற்பி, கவிச்சிறை, தாகம், தேன் துளிகள், பார்வை மழைபெய் ஆகிய தலைப்புகளில் எழுதப்பெற்ற 15 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51332).