10525 கடவுளிடம் சில கேள்விகள்: கவிதைத் தொகுப்பு.

வே.முல்லைத்தீபன் (இயற்பெயர்: வே. தீபன்). வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, மார்ச் 2014. (வவனியா: சுப்பிரின் அச்சகம், இல.134, 2ம் குறுக்குத் தெரு, சூசைப் பிள்ளையார் குளம்).

xvi, 75 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 240., அளவு: 19×13.5 சமீ., ISBN: 978-955-41319-0-3.

முல்லைத்தீபனின் கைவண்ணத்தில் எழுந்த அகம் சார்ந்த புதுக்கவிதைகளினதும், சமூக சீர்திருத்தக் கவிதைகளினதும், போரியல் சார்ந்த புதுக்கவிதைகளினதும் தொகுப்பு இது. வாழ்க்கை என்பதில் தொடங்கி தலைப்பேயில்லை என்பது ஈறாக மொத்தம் 25 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கடவுளிடம் இவர் கேட்கும் கேள்விகள் உலகியல் அடிப்படையிலும், தர்க்கரீதியாகவும், விஞ்ஞான அடிப்படையிலும் நியாயமானவையாகவே தெரிகின்றன. வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரின் 28ஆவது வெளியீடு.

ஏனைய பதிவுகள்

11937 இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்: பதிவும் பகிர்வும்.

கை.சரவணன், ந.மயூரரூபன், சி.நிஷாகரன், லேணையூர் சுரேஷ், முல்லைக் கமல், ரீ.ரமணன். யாழ்ப்பாணம்: எழுகலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, ஜுலை 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ்). viii, 245 பக்கம், விலை: ரூபா 500.,