ஆரணி (இயற்பெயர்: அம்பலவாணர் சிவபாலசுந்தரன்). வவுனியா: தமிழ்க்குடில் வெளியீடு, குருமன்காடு, 1வது பதிப்பு, ஐப்பசி 2011. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).
52 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 19.5×13.5 சமீ.
நம் தமிழ் போற்று என்ற கவிதையில் தொடங்கி அழகிய உலகம் என்ற கவிதை ஈறாக 29 கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுதி இது. யாழ்ப்பாணம், தீவகத்தில், சுருவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் சிவபாலசுந்தரன், பாடசாலைக் காலம் முதல் கவிதைத் துறையில் ஈடுபாடுகொண்ட இவர் புவியியல் சிறப்புக்கலைமாணிப் பட்டம் பெற்றவர். இலங்கை நிர்வாகசேவை முதலாம் தர அதிகாரியாக செட்டிக்குளத்திலும், பின்னர் பிரதேச செயலாளராக வவுனியாவிலும் பணியாற்றியவர். இக்கவிதைத் தொகுதியில் கவிஞர் தாளங்களுடாக பாடல்களை இயற்றியுள்ளார். மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டின் கலவையாக இக்கன்னிப்படைப்பு வெளிவந்திருக்கிறது. சமூகத்தில் புரையோடிப்போயுள்ள தீய பழக்கங்கள், நேர்மையீனம், சமூக ஊழல் போன்ற அநீதிகளைக் கண்டு குமுறும் கவிதைகள் இவை.