பிரபாகரன் வேதிகா. வவுனியா: பழைய மாணவர் சங்கம், வவு/கனகராயன்குளம் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, மே 2015. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம்).
xii, 52 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42298-0-8. பள்ளியில் படிக்கும் போதே தன் முதல் கவிதைத் தொகுப்பினூடாக அறிமுகமாகியிருக்கிறார் பிள்ளைக் கவி செல்வி. பிரபாகரன் வேதிகா. என்னூர் என்ற முதலாவது கவிதை தொடங்கி, பாலாபிஷேகம் என்ற இறுதிக்கவிதை வரையிலும் மொத்தம் 51 கவிதைகளைக் கொண்டதாக, குரும்பையூர் ஐங்கரனின் அணிந்துரையுடன் வவனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினூடாக இந்நூலை வெளியிட்டுள்ளார். அறிவுரைத் தன்மைகள் ஆங்காங்கே இருப்பினும் யதார்த்தப் பாங்கிலான நடைமுறை விடயங்களே பேசுபொருளாகியுள்ளன.