மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம்).
xvi, 83 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 978-955-41614-5-0.
இராமாயணத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான சீதையின் அக்கினிப் பரீட்சை என்ற விடயம் இக்கவிதைத் தொகுப்பில் மறுவாசிப்புக்குள்ளாகியுள்ளது. சீதையின் நிலைக்கு அவள் மட்டும் காரணமல்ல, தானும் காரணம் என்ற எண்ணத்துடன் இராமர் சீதையின் கைபற்றி சிதையேறி இருப்பாரானால் எதிர்காலத்தில் எந்தவொரு இழிசொல்லுக்கும் ஆளாகியிருக்கமாட்டார் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறு கம்பராமாயணத்தை புதிய கோணததில் பார்வையிட்டுக் கவிதைகளாக்கியுள்ள திருமதி மைதிலி தயாபரன் இந்நூலில் பெண்ணியம் சார்ந்த பல மரபுக்கவிதை வரிகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பதிவுசெய்திருக்கிறார். தனத கற்பனையையும் சுவைக்காகச் சேர்த்து எம் பண்பாட்டுக் கூறுகளையும் இயல்புநிலைகளையும் கேள்விக்குறியாக்கும் சில இராமாயணக் காட்சிகளை உடைத்து இற்றைக்குத் தேவையானதைச்சொல்லி நிற்கும் மைதிலியின் விசாரணைகளாக இக்கவிதைகள் அமைகின்றன.