சுபோதினி சபாரத்தினம். மாதகல்: சுபோதினி சபாரத்தினம், மாதகல் மேற்கு, 1வது பதிப்பு, 2016. (யாழ்;ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல.424, காங்கேசன்துறை வீதி).
54 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14×20 சமீ., ISBN: 978-955-42702-1-3.
சீதனத்தின் கொடுமையையும், தமிழ்ச் சமூகத்தைச் சூழ்ந்திருக்கும் மடைமைகளையும், சாடிக் கவிதை புனைந்துள்ளார் சுபா. நுணசையம்பதியினில் என்று மாதகல் பதியில் வீற்றிருக்கும் கடவுளரை வேண்டித் தொழுவதுடன் தொடங்கும் இவர், என் கவி, அவ்விடம் தேடி, நினைவுச் சிதறல்கள், எதை எழுதுவது, சுவையா இல்லை சுமையா, கவிதை, கொஞ்சம் சிந்தி என்று பல்வேறு தலைப்புகளில் தன் கவிதைகளைத் தொடர்ந்து, இறுதியாக அனுமதிப்பத்திரம் என்ற 42ஆவது கவிதையுடன் தன் மனங்கொண்ட உணர்வுகளை இக்கவிதைநூலின் பக்கங்களில் புகைப்படங்கள் சகிதம் பதிவுசெய்திருக்கின்றார். வாழ்வியல், அலத்திரனியல், பண்பாடு,சமூக நோக்கு, கூட்டுறவு எனப் பலதுறைகளையும் இவர் தொட்டுச் செல்கிறார்.