மீரா றதீப். அக்கரைப்பற்று -6: இளமாணிப் பட்டப் பயிலுநர் சங்கம், 1வது பதிப்பு, ஜூன் 2012. (அக்கரைப்பற்று -2: சதா பதிப்பகம், 78/1, உடையார் வீதி).
(18), 46 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-51608-2-7.
கவிஞர் மீரா றதிப் அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வீதியைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர். இத்தொகுப்பில் மழைக்கால இரவின் வாசம் பற்றிய ஒர் குறிப்பு, காதல் செய்வீர், வீட்டோடு கலந்த ஞாபகங்கள், நானும் ஓர் கவசமணிந்த மலர், தொடரும் என்பயணங்கள், எனக்குத் தெரிந்த ஓரு அரக்கி என இன்னொரன்ன 27 கவிதைகளை இத்தொகுப்பில் இணைத்திருக்கிறார். மரபும் நவீனமும் செறிந்த நிலையில், ஓசையும் உடைவும் கலந்துவர, கவித்துவமான பல கவிதைகளை இத் தொகுப்பில் காணமுடிகின்றது.