அனார் (இயற்பெயர்: இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம்). தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 600077: மணி ஓப்செட்).
64 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81969-93-9.
அனாரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. முன்னர் வெளிவந்த மூன்று தொகுப்புகளின் செறிவுடன் புதிய வீச்சை உட்கொண்டிருக்கும் கவிதைகள் இவை. பெண்ணை இயற்கையின் பகுதியாக மட்டுமல்ல, இயற்கையாகவும் சமூகத்தின் அங்கமாகவல்லாமல் சமூகமாகவும், ஆணின் சார்பாகவல்லாமல்ஆணை நிர்ணயிப்பவளாகவும் மாற்றும் மானுட மனதின் சொற்பெருக்கு இந்தக் கவிதைகளின் ஆதாரம். இறைவனைத் தொடுவதும் மருதாணி இடுவதும் ஒன்று என்ற நம்பும் இம்மை சார்ந்த மனதின் கவிதை முகம் இந்நூலில் வெளிப்படுகிறது. அனார்- கிழக்கிலங்கையின் சாய்ந்தமருதுவில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து வருபவர். 2004இல் வெளிவந்த ‘ஓவியம் வரையாத தூரிகை’ என்ற முதலாவது கவிதை நூலுக்கு இலங்கை அரசின் சாஹித்திய விருதும் வட கிழக்கு மாகாண அமைச்சின் சாஹித்திய விருதும் 2005இல் கிடைத்தன. இரண்டாவது தொகுப்பான ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பிற்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதை 2011இல் வழங்கியது. மேலும் 2013இல் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் (இந்தியா), இலக்கியத்துறைக்கான ‘சிகரம் தொட்ட சாதனைப்பெண்’ விருதை வழங்கியது.