10625 மகாஜனன் கவிதைகள்.

ம.பா.மகாலிங்கசிவம், மயிலங்கூடலூர் பி.நடராசன், கோகிலா மகேந்திரன் (தொகுப்பாசிரியர்கள்). தெல்லிப்பழை: மகாஜனாக் கல்லூரி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (கோண்டாவில்: அன்ரா டிஜிட்டல் இமேஜ், உப்புமடச் சந்தி, காங்கேசன்துறை வீதி).

ix, (8), 293 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×15 சமீ.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டுவிழா நினைவாக வெளியிடப்பெற்றுள்ள இந்நூலில், மேற்படி கல்லூரியின் தாபகர் உள்ளிட்ட பழைய மாணவர், ஆசிரியர், அதிபர்களிற் கவிஞர்களாக இருந்த 53 படைப்பாளிகளின் தேர்ந்த கவிதைகள் இடம்பெறுகின்றன. பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை, கா.சின்னப்பா, மஹாகவி து.உருத்திரமூர்த்தி, அ.ந.கந்தசாமி, செ.கதிரெசர்பிள்ளை, நா.சிவபாதசுந்தரனார், தெல்லியூர் நா.ஆறுமுகம், தெல்லியூர் செ.நடராசா, புலவர் ம.பார்வதிநாதசிவம், மயிலங்கூடலூர் பி.நடராசன், பண்டிதர் சி.அப்புத்துரை, த.கனகரத்தினம், சு.செல்லத்துரை, சிவத்திரு வ.குகசர்மா, மாவை தி.நித்தியானந்தன், விழிசைச் சிவம், நா.சண்முகலிங்கன், சபா ஜெயராசா, கோகிலா மகேந்திரன், இரா.மருதயினார், கனகசபாபதி நாகேஸ்வரன், ஆ.சி.நடராசா, கா.சுப்பிரமணியம், உ.சேரன், க.ஆதவன், இளவாலை தி.விஜயேந்திரன், கே.எஸ்.சிவஞானராசா, திருமதி சௌ.பத்மநாதன், திருமதி பகீரதி கணேசதுரை, திருமதி மரகதவல்லி சர்வானந்தராசா, திருமதி ஆனந்தி சிவஞானசுந்தரம், யுவனேஸ்வரி (ஊர்வசி), நா.ஸ்ரீசபேசன், திருமதி ஒளவை விக்கினேஸ்வரன், ம.பா.மகாலிங்கசிவம், ஏலையா க.முருகதாசன், திருமதி இந்திராணி ஈஸ்வரானந்தம், ப.வை.ஜெயபாலன், திருமதி நிர்மலா பிரபுதேவன், மு.க.சு.சிவகுமாரன், இரா.ஜெயக்குமார், பூ.நகுலன், பா.பாலமுரளி, அ.புராந்தகன், ம.பிரவீணன், இ.தனஞ்சயன், ந.சிஸ்கந்தராசா, ஏ.புராதனி, இ.ஸ்ரீபுராதனி, ச.நாகநந்தினி, கு.கோபிகா, க.வாணிமுகுந்தன், திருமதி ஜெயரஞ்சனி மயில்வாகனம் ஆகிய 53 கவிஞர்களின் தேர்ந்த பாடல்களின் தொகுப்பு இதுவாகும்.

ஏனைய பதிவுகள்