ஜீவா-ஜீவரத்தினம். கல்முனை: மஞ்சுளா பிரசுரம், துறைநீலாவணை, 1வது பதிப்பு, சித்திரை 1963. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32, கண்டி வீதி).
44 பக்கம், விலை: சதம் 75., அளவு: 18×12.5 சமீ.
கவிதையின்பம், காட்சியின்பம், காதலின்பம், சமூகம், பல்சுவைப் பாடல்கள், தனிப்பாடல்கள் ஆகிய ஆறு தலைப்புகளின்கீழ் இக்கவிதைத் தொகுதி வகுத்துத் தரப்பட்டுள்ளது. கிழக்கிலங்கையின் துறைநீலாவணையைச் சேர்ந்த கவிஞர் ஜீவா ஜீவரத்தினம், விவேகி, தினகரன், வீரகேசரி, உதயதாரகை, கலைச்செல்வி, ஆனந்தசாகரம், சுதந்திரன் முதலிய இதழ்களில் உயிர்த்துடிப்புள்ள கவிதைகளை வழங்கியவர். நல்லூர் ஆசிரிய கலாசாலையில் பயிற்றப்பட்ட தமிழ்ஆசிரியர். தென்னமரவாடி அரசினர் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய வேளையில் இத்தொகுதியை வெளியிட்டிருந்தார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12080).