10645 வெற்றியுடன்.

சமரபாகு சீனா உதயகுமார். வல்வெட்டித்துறை: கண்ணன் வெளியீடு, பிள்ளைநிலா, கொற்றாவத்தை, 1வது பதிப்பு, சித்திரை 2009. (அல்வாய்: மதுரன் கிறாப்பிக்ஸ் அன்ட் ஓப்செட் பிறின்டர்ஸ், அல்வாய் வடமேற்கு).

xv, 112 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 19×11 சமீ.

இக்கையடக்க நூல் 54 கவிதைகளை உள்ளடக்கியது. கவிதைகள் நம்பிக்கையூட்டுவதாகவும், சமூகப் பிரச்சினையைப் பேசுவதாகவும், போரின் கொடுமையால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்குவதாகவும், சமாதானத்தை விரும்புவதாகவும் விதவைகளின் வாழ்வியல் நிலைமைகளை எடுத்துக்கூறுவதாகவும் அமைகின்றன. சுருங்கக்கூறின் வாழ்வியலின் ஒவ்வொரு நுணுக்கங்களிலும் உதயகுமார் கவனத்தைச் செலுத்திக் கவிதைகளில் விதைத்திருக்கின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 202669).     

ஏனைய பதிவுகள்

11262 ஸ்ரீலலிதா சகஸ்திரநாமம்:அன்னையின் அருட்பேராயிரம்.

க.வை.ஆத்மநாத சர்மா (தமிழாக்கம்). திருக்கோணமலை: செல்லையா இராமச்சந்திரன், திருமதி புஸ்பராணி இராமச்சந்திரன், இல. 22, கீழ் வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (திருக்கோணமலை: ஸ்ரீகணேசா அச்சகம்). 28 பக்கம், விலை: