10678 ஆஷா நாயும் அவளும்: சிறுகதைத் தொகுதி.

யோ.புரட்சி. கொழும்பு 6: இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம், 9-2/1,  நெல்சன் இடம், 1வது பதிப்பு, மாசி 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், இல. 681, காங்கேசன்துறை வீதி).

viii, 62 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-51423-4-2.

முல்லைத்தீவு, விசுவமடு,  வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த யோ.புரட்சியின் சிறுகதைகளின் தொகுப்பு இது. காதல் அவசரம், தற்கொலை, பார்வைபெறும் விழியாள், மாறுகிறாள் மனைவி, இரண்டு மொட்டுக்கள் விரிகின்றன, இதுவும் வேலைதான், ஆகஸ்ட் 25, ஆசையின் வலையில், இணையாத கோடுகள், துரோகி ஆகிடும் மனைவி, ஆஷா நாயும் அவளும் ஆகிய 11 கதைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. போர்க்காலங்களின் துயர்வலிகளைச் சுமந்துவரும் கதைகள் சிலவும், அகதிமுகாம் வாழ்விலும், போர் தின்ற பூமியிலும் மலர்ந்த காதல்களைச் சில கதைகளும் பேசுகின்றன.  காதல் என்ற பெயரில் கட்டுப்பாடுகளை மீறுகின்றபோது பின்விளைவுகள் என்னவாகும் என்பதை காதல் அவசரம் என்ற கதையில் விபரிக்கும் ஆசிரியர், தன்னை நம்பி வாழும் குடும்பம், தான் இல்லை என்றானபோது என்ன பாடுபடும் என்பதை உணர்ந்தால் தற்கொலைகளுக்கே இடமிருக்காது என்பதை தற்கொலை என்ற கதையில் விபரிக்கிறார். கணப்பொழுதின் விரக்தியில் தற்கொலை செய்ய முயலும் ஒருவரின் மனச்சாட்சியாக இக்கதை அமைகின்றது. இதுவும் வேலைதான் என்ற கதை தான் படித்த படிப்பிற்கேற்ற தொழில்தான் வேண்டும் என்று நிகழ்காலத்தை வீணடிக்கும் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்குவதாக அமைகின்றது. இவ்வாறு ஒவ்வொரு கதையும் எம்மைச் சூழவுள்ள சமகால நிகழ்வுகளின் சமூகவியல் பார்வையாக அமைந்துள்ளது. 19.2.2015 அன்று முல்லைத்தீவு விஸ்வமடு இளங்கோபுரம் பாடசாலைக்கு எதிரேயுள்ள காட்டில் காலை 10 மணிக்கு  இந்நூல் வெளியிடப்பட்டது. இதே வெளியீட்டு நிறுவனத்தால் முன்னர் வெளியிடப்பட்ட இவரது கவிதைத் தொகுதியான  ‘எதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும்’ என்ற நூல் முல்லைத்தீவுக் கடலில் வைத்து வெளியீடு செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

14093 திருக்கோணேஸ்வரம்.

வை.சோமாஸ்கந்தர், அ.ஸ்ரீஸ்கந்தராசா. திருக்கோணமலை: பொ.கந்தையா, தனசக்தி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1963. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி). xi, 100 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 1.75, அளவு: 18×13