10680 இவளுக்காகவா?.

ஜுனைதா ஷெரீப் (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). காத்தான்குடி: கே.எம்.எம்.ஷெரீப், 27, லேக் டிரைவ், 1வது பதிப்பு, மார்ச் 1991. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).

(2), 114 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-95096-2-4.

இச்சிறுகதைத் தொகுதியில் பலிக்கடாக்கள், மனைவிக்கு சம்பளம், நான் திருந்திட்டேன்மா, தெய்வம், திறப்பு, தொண்டர் ஆசிரியை, இவளுக்காகவா?, சலாமத்போ, ஒரு மனிதன் ஒரு துவாய், ஹத்தம் ஆகிய 10 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை முன்னர் இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்தவையாகும். ஜுனைதா ஷெரீப் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகப் பணியாற்றிய காலகட்டத்தில் இந்நூல் வெளிவந்திருந்தது.

ஏனைய பதிவுகள்

11640 நான்(கவிதைகள்).

கவிஞர் அபூபக்கர் (இயற்பெயர்: யு.ஆ.அபூபக்கர்). காத்தான்குடி 2: முனீரா பப்ளிக்கேஷன்ஸ், 86, ஓல்ட் ரோட், 1வது பதிப்பு, ஏப்ரல் 1980. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்). 60 பக்கம், விலை: ரூபா 5., அளவு: