வ.ஐ.ச.ஜெயபாலன். சென்னை 600018: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை 600005: மணி ஓப்செட்ஸ்).
168 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80072-56-2.
நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழும் சண்முகம்பிள்ளை ஜெயபாலன் 1944இல் இலங்கையில் மானிப்பாய் பிரதேசத்தில், உடுவில் கிராமத்தில் பிறந்தவர். இந்தத் தொகுதியில் ஜெயபாலனின் சேவல் கூவிய நாட்கள், செக்குமாடு, அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது ஆகிய மூன்று குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. இக்குறுநாவல்கள், ஈழத்தமிழரின் சிதைக்கப்பட்ட கனவுகளையும் உடைத்தெறியப்பட்ட வாழ்க்கைகளையும், இழந்த மண்ணையும் பற்றிய ஆழமான பெருமூச்சுகளை உருவாக்குபவை.