10747 காய்ந்து போகாத இரத்தக்கறைகள்: குறுநாவல்.

‘கம்பிகளின் மொழி’ பிரேம். மன்னார்: கோபால் வெளியீட்டகம்,  மினுக்கன், திருக்கேதீஸ்வரம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (நெல்லியடி: தமிழ்ப் பூங்கா பதிப்பகம்).

iii, (3), 62 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×13 சமீ.

கம்பிகளின் மொழி என்ற கவிதை நூலினை ஈழத்து இலக்கியத்துக்கு வழங்கிய பிரேம் எழுதியுள்ள குறுநாவல் இது. வன்னியில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் இரத்தம் சிந்திய ஒரு குடும்பத்தின் கதையாக இது அமைந்துள்ளது. தர்ஷன், அமுதா என்னும் இரு இளம் உள்ளங்கள் கொண்ட நட்பு, பின்னர் காதலாக வளர்கின்றது. இவர்களது காதல், இடப்பெயர்வு, முள்ளிவாய்க்கால் நகர்வு, புனர்வாழ்வு முகாம் என்னும் வன்னி மக்களின் வாழ்வுத்துயரப் படிநிலைகளினூடாக நகர்ந்து இறுதியில் மீள்குடியேற்றத்தின் பொழுதில் இன்னொரு காதலின் ஊடான திருமண எற்பாடுகள் குறித்து சுருக்கமாக இந்நாவல் பேசுகின்றது. யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வசிக்கும் இவ்விளம் படைப்பாளி, அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். போராளியாக, சிறைக்கைதியாக, மாற்றுத்திறனாளியாக இருந்து பட்ட துயரங்களைத் தன் பட்டறிவின் மூலம் இக்குறுநாவலில் வெளிக்கொணர்ந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்