ஆர்.கணபதிப்பிள்ளை. கொழும்பு 13: நண்பர்கள் வட்டம், B1-F4 புளுமெண்டால் தொடர்மாடி, 1வது பதிப்பு, மார்ச் 2004. (கொழும்பு 6: லண்டன் இன்போடெக், 36/1-1, புகையிரத நிலைய வீதி).
(12), 80 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20×14 சமீ.
இந்நூலில் உலகமயமாக்கலின் செல்வாக்கும் அது எடுத்துவரும் சாதகங்களும் இலங்கை ஒலிபரப்புத்துறை, புவி நடுக்கத்தின் தாக்கங்கள், முத்தொள்ளாயிரத்தில் சில முத்துக்கள், பல்லவர் கால பக்தி இலக்கியங்கள், திறந்த கல்வியும் இன்றைய உலகில் அதன் செல்வாக்கும் ஆகிய ஆறு கட்டுரைகளும், துறைசார் நிபுணர்களுடனான ஐந்து நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. நேர்காணல்கள் யாவும் விவாகரத்து சட்டங்கள், உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடி வதை, ஆதன சட்டங்கள், இருதய நோய்களும் சிகிச்சை முறைகளும், பொலிஸ் பொதுமக்கள் உறவு ஆகிய ஐந்து தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் பட்டப்பின்படிப்பைத் தொடர்ந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகையியல் டிப்ளோமா பயிற்சியைப் பெற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றுகின்றார். ஆசிரியரின் முதலாவது நூல் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36248).